சீனத் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதால் இலங்கைக்கு என்ன நன்மை?

0
275
Article Top Ad

அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காக சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்றையதினம் அனுமதியளித்துள்ளது.

அவசர நிலைமையின் போது பயன்படுத்துவதற்காக சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்றையதினம் அனுமதியளித்துள்ளது.

இது கொவிட்-19 எனும் கொரோனா வைரஸிற்கு எதிராக உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 6வது தடுப்பூசியாக அமைந்துள்ளது.

கடுமையான ஆய்வுகளின் பின்னர் சினோஃபார்ம் தடுப்பூசி உலக சுகாதார ஸ்தாபனத்தின் பாதுகாப்பு வினைத்திறன் மற்றும் தரச்சான்றை பெற்றுள்ளதாக

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயேசுஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலையால் உலக நாடுகள் மிகவும் திணறிப்போயிருக்கின்ற இந்த தருணத்தில் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைத்துள்ளமை முக்கியமானது.

குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்கு மிகமிக அவசியமானது.

இந்தியாவில் தற்போது கொரோனா நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றபோதும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளர்களாக இந்திய நிறுவனங்கள் விளங்குகின்றமையால் நிலைமையை சில மாதங்களுக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வாய்ப்புண்டு .

21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் இதுவரை சுமார் 1 மில்லியன் வரையானவர்களுக்கே முதலாம் கட்டத்தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அங்கிருந்து வரவேண்டிய தடுப்பூசிகள் அடுத்து சில வாரங்களில் கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை.

இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியே இலங்கையின் பிரதானமான தடுப்பூசியாக அமையும் என நேற்றையதினம் ஸ்புட்னிக் தடுப்பூசி ஏற்றலை ஆரம்பித்து வைத்த போது சுகாதார இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த வேளையில் சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கிகாரம் வழங்கியுள்ளமை பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் சீனாவினுடைய தடுப்பூசி யில் சுமார் 600000 வரையான கையிருப்பு ஏற்கனவே இலங்கையிடம் உள்ளது.

அத்தோடு சீனா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாக இருப்பது மாத்திரமன்றி பாரிய அளவில் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அனுபவத்தையும் ஆற்றலையும் பலதடவை நிருபித்துள்ளதால் பெருந்தொகையான தடுப்பூசியை விரைந்து அனுப்புவதற்கு இயலும்.

இதனிடையே சீனா தாயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசி அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் பதிவாகும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தெரிந்தெடுத்து, அந்த மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதற்குத் பெற்றுக் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா அரசாங்கத்தால் இலங்கைக்கு இலவசமாக ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

ஆகவே இன்றைய உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பு மிகப்பெரிய அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இலங்கைக்கு ஆறுதலாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.