ஐயகோ! என்றுமில்லாதவாறு இலங்கையில் இன்று 2672 கொரோனா தொற்றாளர்கள்

0
322
Article Top Ad

இலங்கையில் முன்னெப்போதுமில்லாத வகையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 2,672 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29ம் திகதி முதல் தினமும் இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 1500த் தாண்டியிருந்தது.

ஏப்ரல் 29- 1531 தொற்றாளர்கள்
ஏப்ரல் 30- 1662 தொற்றாளர்கள்
மே     01-  1716 தொற்றாளர்கள்
மே     02-  1891 தொற்றாளர்கள்

மே     03-  1923 தொற்றாளர்கள்
மே     04-  1914 தொற்றாளர்கள்
மே     05-  1939 தொற்றாளர்கள்
மே     06 – 1895 தொற்றாளர்கள்
மே     07-  1914 தொற்றாளர்கள்
மே     08 – 1896 தொற்றாளர்கள்
மே     09-  2,672 தொற்றாளர்கள்

தற்போது இலங்கையில் கொரோனாவிற்காக சிசிச்சை பெற்றுவருகின்ற தொற்றாளர்கள் எண்ணிக்கை முதற்தடவையாக 20000க் கடந்துள்ளது.

தற்போது மொத்தமாக 20 657 தொற்றாளர்கள் சிசிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றுவரையில் 786 ஆக இருந்தது. இதில் நேற்றையதினத்தில் மாத்திரம் பதிவான 22 மரணங்களும் அடங்கும். அடுத்துவரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.