பத்துலட்சம் இந்தியர்கள் ஏற்கனவே கொரோனாவிற்கு பலியாகியிருக்கலாம்- அதிர்ச்சித்தகவலை வெளியிட்டார் பிரபல கணிதவியலாளர்

0
361
Article Top Ad

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் தொடர்பாக வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் மிகவும் குறைவாக கணிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்தியாவில் கொரோனாவால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே பத்துலட்சத்தைக் கடந்திருக்கலாம் என பிரித்தானியாவிலுள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் கணிதவியலாளராக திகழும் முராட் பனஜி தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வமாக வெளியான தரவுகளின் படி இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 246,146 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்தியாவில் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படும் தரவுகளில் 80% மான விபரங்கள் தெரிவிக்கப்படுவதில்லை என முராட் பனஜி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபல ஊடகவியலாளர் கரன் தாப்பருடனான நேர்காணலின் போதே அவர் இந்தத்தகவல்களை தெரிவித்தார்.