கொழும்பில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகரித்துவருவதனை உறுதிப்படுத்துவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் அமைந்திருக்கின்றன.
கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் இலங்கையில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்கள் 2,672 பேரில் 750ற்கும் அதிகமானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 தடுப்பு தொடர்பான தேசிய மத்தியஸ்தானத்தின் தரவுகளுக்கு அமைய கொழும்பில் 755 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இதில் கெஸ்பாவ மற்றும் பிலியந்தல பகுதியில் தலா 180ற்கும் அதிகமானவர்கள் இணங்காணப்பட்டனர்.
நேற்றையதினம் இலங்கையின் வரலாற்றில் ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் இலங்கையில் தினசரி பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து ஏப்ரல் 29ம் திகதி தொடக்கம் 1500ற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகிவருகின்றனர்.
இலங்கையில் கொரோனாவின் தீவிர அதிகரிப்பிற்கு பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமையும் கொரோனாவின் புதிய திரிபும் காரணமாகக் கூறப்படுகின்றது.