243 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று: 23 பேர் கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிசிச்சை

0
250
Article Top Ad

243 செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிசிச்சை பெற்றிருப்பதாக கொழும்பு தேசியவைத்திய சாலையின் சிரேஷ்ட செவிலியர் உத்தியோகஸ்தரான புஸ்பா ரம்யானி டி சொய்ஸா தெரிவிக்கின்றார்.

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 27 செவிலியர்கள் கொரோனா தொற்றிற்காக சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவிலியர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் அவர்களுடன் தொடர்பிலிருந்த பணிக்குழு உறுப்பினர்களும் தனிமைப்படுத்துள்ளனர்.

இன்றையதினம் சர்வதேச செவிலியர் தினத்தைக் கொண்டாடும் நிலையில் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை முன்னெப்போதுமில்லாத வகையில் கொரோனா காலத்தில் மக்கள் உணர்ந்துள்ளனர்.

செவிலியர்கள் இல்லையென்றால் இன்று உயிரிழப்புக்களின் அளவு பன்மடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் ஐயமில்லை

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் உச்சம் பெற்றுள்ளது. கடந்த மூன்று நாட்களாக தினமும் 2500ற்கு அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.