ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப்பத்திரத்தை ஏன் தாக்கல் செய்யமுடியவில்லை ? சட்டமா அதிபர் விளக்கம்

0
249
Article Top Ad

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில கைது செய்யப்பட்ட ‘யு’ குழு சந்தேகநபர்கள் 42 பேர் தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்களை எழுத்துபூர்வமாக உறுதிப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம், பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் 130 பக்க அறிக்கையொன்றை சட்ட மாஅதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பி வைத்துள்ளதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன, தெரிவித்தார்.

அத்துடன் ஈஸ்டர்  தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 பேர் மீதான விசாரணைகள் முழுமையடையவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிஐடி விசாரணை நிறைவு பெறாததால் தமது பதவிக்காலத்துக்குள் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல்செய்ய முடியாமல்போயுள்ளதாக சட்ட மாஅதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

அவ்வாறு விசாரணைகள் முழுமை பெறாமை தொடர்பில் தாமதம் உள்ளதா என்பதையும் அதற்கான காரணங்களை கண்டறியுமாறு சட்ட மாஅதிபர், பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.