அப்பாவி மக்களைச் சாகடிக்காதீர்; நாட்டைத் தொடர்ந்து முடக்குங்கள்- – அரசிடம் ரணில் வலியுறுத்து

0
168
Article Top Ad

“கொரோனாப் பெருந்தொற்றுக்கு இலக்காகி அப்பாவி மக்களைச் சாவதை உடன் நிறுத்த நாட்டைத் தொடர்ந்து முடக்கி வைத்திருப்பதே ஒரே வழி.”

– இவ்வாறு அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நேரத்தில் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல், மக்களுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டால் அதை மீட்டெடுக்க முடியும். ஆனால், இழந்த உயிர்களை எங்களால் மீட்க முடியாது.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைக் கவனத்திலெடுத்து அதற்கமைய அரசு செயற்பட வேண்டும்.

நாட்டைப் பூட்ட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தால் அதனை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

உயிர்களைக் காப்பாற்றுவதே அரசின் கடமை. நாம் அனைவரும் அந்த நோக்கத்துடன் செயற்பட வேண்டும்” – என்றார்.