சிகிச்சை வசதிகளை அதிகரிப்பதற்கு செல்வந்தர்களிடம் கையேந்தும் அரசு

0
297
Article Top Ad

“இலங்கையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரண வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் செல்வந்தர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.”

– இவ்வாறு கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் நோயாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்று சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்களுக்கு மருத்துவமனைகளில் பற்றாக்குறை நிலவுகின்றது.

தற்போதைய நிலைமையில் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அங்கு சிகிச்சையளிப்பதற்கான சுவாச உதவிக் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களையும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக நாட்டிலுள்ள செல்வந்தர்கள் உதவ வேண்டும்” – என்றார்.