அடுத்து வரும் வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

0
273
Article Top Ad

“இலங்கையில் நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால், எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும்.”

– இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிடுமென்று கூறிக்கொண்டு இருந்துவிட முடியாது என்றும்,  அவ்வாறு செய்தால் நாடு தானாகவே பேரழிவுக்குள் தள்ளப்படும் என்றும் அந்தச் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த கொத்தணி எங்கிருந்து தோன்றும் என்று தெரியாது என்றும், இதனால் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுகாதார அதிகாரிகளால் மட்டுமே நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் பொதுமக்கள் தங்கள் சுயக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என்று கோவிட்த் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தெரிவித்தார்.