நிறைவேறியது ‘போர்ட் சிட்டி’ சட்டமூலம்!

0
253
Article Top Ad

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 148  வாக்குகளும் எதிராக 59  வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குறித்த சட்டமூலம் தொடர்பான வாத விவாதங்கள் நேற்றும் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.