கொரோனாவால் மரணத்தின் வாயிற்படியை தொட்டுவந்தவரின் சோகக்கதை

கொவிட் நோயை வரவழைத்துக்கொள்ளாதீர்கள் ... மிகவும் கவனமாக இருங்கள்..! துரதிஷ்டவசமாக என்னை பீடித்த கொவிட்-19 நிமோனியா மற்றும் மிகவும் சந்தேகத்திற்கிடமான PCRபரிசோதனை

0
349
Article Top Ad
கொவிட் 19 நிமோனியாவால் பாதிக்கப்பட்ட காலத்தில் நான் அனுபவித்த கடுமையான வலி மற்றும் மன அழுத்தம்…. அந்த விரும்பத்தகாத காலத்தை நினைக்கும்போது இன்றும் நான் உணரும் மன அழுத்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்நோயிலிருந்து யாரேனும் தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நோக்கத்திற்காகவும் எனது தனிப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுகின்றேன்.

அளுத்தமவைச் சேர்ந்த சசிக கலப்பத்தி மற்றும் அவரது மனைவி தக்ஸிலா கலப்பதியின் அனுபவப்பகிர்வு

சசிக கலப்பத்தி:
அவர்(நண்பர்) தொற்றுக்குள்ளாகியிருந்தார் என்பது எனது கணிப்பு.
05/04/2021 அன்று கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட என் நண்பருடன் காலை உணவை உட்கொண்டேன்.
அவருக்கு இந்நோய் இருப்பதாக 09/04/2021 அன்று தெரியவந்தது.
அன்றைய தினம் இரவு 09.00 மணிக்கு நான் முதலாவது தடவையாக PCR பரிசோதனையை செய்துகொண்டேன்.
11/04/2021 அன்று வெளிவந்த முடிவில் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது.
13/04/2011ஆம் திகதி இரவில் என் தலை இலேசாக வலிக்க ஆரம்பித்தது..
நான் அதனை பெரிதாக கருதவில்லை.
16/04/2021 ஆம் திகதியாகும்போது எனது தொண்டையில் சளியை உணர்ந்தபோதும்இ அது வெளியேறவில்லை. அதனால் நான் பனடோலை எடுத்துக்கொண்டேன். இது தற்காலிக நிவாரணியாக இருந்தது.
எனக்கான அடுத்த PCR பரிசோதனை 18/04/2021 அன்று இருந்ததால் நான் வைத்தியரை நாடிச் செல்லவில்லை.
18/04/2021ஆம் திகதியாகும்போது எனது உடல்நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது..
18/04/2021 அன்று எனது இரண்டாவது PCR பரிசோதனை நடத்தப்பட்டது. (PCR REPORT- MELSTA LABS)
19/04/2021ஆம் திகதியன்று வெளிவந்த அதன் பெறுபேற்றில் Negative என தெரிவிக்கப்பட்டது.
இந்த PCR பரிசோதனை பெறுபேறு பற்றி எனக்கு பலத்த சந்தேகம் காணப்பட்டது.
19/04/2021 ஆம் திகதியாகும்போது எனது உடல்நலம் சற்று கடுமையாக பாதிக்கப்பட்டது.
20/04/2021 அன்று எனக்கு தெரிந்த வைத்தியர் ஒருவர் எனக்கு சிகிச்சையளித்தார்.
எனினும் நோய் குணமடையாத காரணத்தால் 24/04/2021 அன்று நான் மீண்டும் வைத்தியரை நாடினேன்.
எனினும், நோய் குறையவில்லை.
இதனால் 26/04/2021ஆம் திகதி பிறிதொரு வைத்தியரை நாடினேன்.
அப்போது எனக்கு ஆஸ்துமா நோய் சிறிதளவில் இருப்பதாக குறிப்பிட்டு Inhalerபயன்படுத்துமாறு கூறி அதனை வழங்கினார்.
ஆனால் 26/04- 27/04 ஆகிய இரண்டு இரவுகளும் எனக்கு தூக்கமின்றி விடிந்தன.
எனவே 28/04/2021 ஆம் திகதியன்று Asiri central மருத்துவமனைக்குச் சென்று தங்கியிருந்து சிகிச்சைபெற தீர்மானித்தேன்.
அங்கு Dr K.Thirawalan அவர்களை சந்தித்தேன். அப்போது எனக்கு Bronchitis அதாவது மூச்சுக்குழாய் அழற்சி இருப்பதாக குறிப்பிட்டார்.
அவர் என்னை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக administration பகுதிக்குச் சென்று பதிவுசெய்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
18/04/2021 அன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இந்த மருத்துவர்கள் யாரும் எனது நோயை சரியாக அடையாளம் காணவில்லை.
அது துல்லியமானதல்ல என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அனைவருக்கும் Rapid Antigen பரிசோதனை செய்யவேண்டுமென வைத்தியசாலை ஊழியர்கள் எனக்கு தெரிவித்தனர்.
அப்போது எனக்கும் என் மனைவிக்கும் கொவிட்-19 தொற்று இருப்பதாக அறிவித்தார்கள்..
நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கொவிட் தொற்றில் பாதிக்கப்பட்டமையை நான் தெய்வ ஆசீர்வாதமாகவே கருதுகின்றேன். அதுபற்றி பின்னர் விளக்குகின்றேன்.
நாங்கள் இருவரும் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட பிறகு கொவிட் நோயாளிகளை அந்த வைத்தியசாலையில் அனுமதிப்பதில்லை என வைத்தியசாலை தரப்பு எம்மிடம் தெரிவித்தனர்.
ஆனால் நாம் வைத்தியசாலையில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் கொரோனா Positive என தெரிவிக்கப்பட்டதால், அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டோம்.
நான் தங்கியிருந்த அறைக்கு அன்றிரவு வந்த மிகவும் கனிவான தாதி சந்திரானி எனக்கான முதலுதவியை ஆரம்பித்தார்.
இதற்கிடையில், 29/04 அன்று Dr K. Thirumawalan எனக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக வைத்தியசாலை தரப்பினர் என்னிடம் தெரிவித்தனர்.
எனக்கு சிகிச்சையளிக்க விரும்பும் எந்த வைத்தியராக இருந்தாலும் எனக்கு சிகிச்சையளிக்கும்படி வைத்தியசாலைக்கு நான் அறிவித்தேன்.
பின்னர் வைத்தியர் Thurul Attygalle மற்றும் அவருடனான ஊழியர்கள் எனக்கு சிகிச்சையளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
29/04 – 30/04 காலப்பகுதியில் நான் என் வாழ்க்கையை சாதாரணமாக கழித்தேன்.
30/04 பகல் chest physician Dr Aflah Safikren அவர்கள் என்னிடம் வந்து நான் Bathroom செல்லும்போது சோர்வாக இருக்கின்றதா என கேட்டார்.
அச்சந்தர்ப்பத்தில் அவ்வாறான அசௌகரியம் எனக்கு ஏற்படவில்லை.
அதனால், அப்படியான பிரச்சினை இல்லையென குறிப்பிட்டேன்.
ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் எனக்கு x ray எடுத்தார்கள்.
அவர் எனது x ray யை பார்த்துவிட்டுத்தான் அவர் அவ்வாறு கேட்டுள்ளார் என்பதை உணர்ந்தேன்.
01/05 அன்று காலை குருதி பரிசோதனைக்காக இரத்தம் எடுத்தனர். அப்போது உடம்பை சற்று இறுக்கமாக வைத்திருந்தேன். திடீரென்று என்னால் சுவாசிக்க முடியவில்லை.
இந்த நோய் பற்றி நான் உணர்ந்த முதலாவது அறிகுறி அதுதான். சுமார் 20 நிமிடங்கள் நான் சுவாசிக்க சிரமப்பட்டேன்.
காலை 9 மணியளவில் நான் bathroom சென்றேன்
முன்னர் வைத்தியர் என்னிடம் கேட்ட சகல அறிகுறிகளையும் நான் உணர்ந்தேன்.
எனது கட்டிலிலிருந்து இறங்க வேண்டாம் என 02/05 அன்று எனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இறுதியில் 8 நாட்களின் பின்னரே நான் கட்டிலில் இருந்து இறங்கினேன்.
அன்று பகல் வைத்தியர் என்னிடம் வந்து ‘விசேட மருந்து’ ஒன்று இருப்பதாகவும் அதன் விலை அதிகம் என்றும் விலை தொடர்பில் பிரச்சினை உள்ளதா என்றும் கேட்டார். குணமடைவேன் என்றால் தாருங்கள் எனக் குறிப்பிட்டேன்.
அன்றைய தினமே என்னை ICU பகுதிக்கு மாற்றுவதாக குறிப்பிட்டார்கள். ஆனால் Asiri Central வைத்தியசாலையில் ICU பகுதியில் இடமில்லை. ஆகவே Asiri surgical வைத்தியசாலைக்கு மாற்றுவதாக குறிப்பிட்டார்கள்.
எப்படியோ நான் Asiri surgical வைத்தியசாலைக்கு மாற்றப்படவில்லை.
அவர்கள் வைத்தியசாலையிலேயே ஒரு தனி அறையில் எனக்காக ICU ஒன்றை உருவாக்கினார்கள். இது முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அறை. அழுத்தம் குறைவு. அம்மை நோய் போன்ற நோய்களில் பீடிக்கப்பட்டவர்களை அனுமதிக்கும் வகையில் இந்த பகுதி உருவாக்கப்பட்டது.
இதனால் தக்ஷிலாவுக்கும் என்னுடன் தங்கமுடிந்தது. 02/05 முதல் 08/05 வரை நான் ICU வில் இருந்தேன்.
03/05 அன்று காலை வந்த மருத்துவர், முன்பு கூறிய அந்த விலையுயர்ந்த மருந்து இல்லையென குறிப்பிட்டார். எனது நம்பிக்கை சிதைந்துபோவதைப் போல உணர்ந்தேன்.
எனது பாடசாலை நண்பர்களுக்கு அழைப்பெடுத்து அந்த மருந்து தொடர்பாக தெரிவிக்கும்படி தக்ஷிலாவிடம் கூறினேன். அந்த மருந்தை கண்டுபிடிக்க அவர்கள் கடுமையாக பாடுபட்டனர். ( Tocilizumab 600 mg one dose)
03/05 இரவு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மரணத்தின் விளிம்பிலுள்ள ஒருவருக்கு ஏற்படும் எல்லா அனுபவங்களும் எனக்கு ஏற்பட்டன… நான் வேறு எங்கோ செல்லத் தயாராகி வருகிறேன் என்பதை உணர்ந்தேன். … தக்ஷிலா என் அருகில் அமர்ந்து என் வாழ்க்கையில் நான் செய்த எல்லா நல்ல விடயங்களையும் ஒவ்வொன்றாக எனக்கு நினைவூட்ட ஆரம்பித்தார். எனக்கு மிகுந்த நிம்மதி ஏற்பட்டது. என் மனதில் பாரிய வெறுமையை உணர்ந்தேன். அந்த நேரத்தில் நான் யாரைப் பற்றியும் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. எனது மனம் நிம்மதியாகவும் அமைதியாகவும் காணப்பட்டது. அந்த மரணப்படுக்கையில் இவ்வளவு அமைதியான மனம் எனக்கு எப்படி வந்ததென எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது .. நான் மிகவும் நிதானமான மனநிலையில் இருந்தேன். சில நேரங்களில் வாழ்க்கையில் நான் செய்த புண்ணியங்கள் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
04/05 காலை ஒரு தகவல் கிடைக்கப்பெற்றது…
அதாவது அந்த மருந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவலே அது.
எனக்கு 600mg மருந்தே தேவைப்பட்டது.
ஆனால் 400mg மருந்துதான் கிடைத்தது. இருப்பதை கொண்டுவாருங்கள், கொடுத்துப் பார்ப்போம் என வைத்தியர் கூறினார்.
அதிஷ்டவசமாக எனக்கு வழங்கப்பட்ட 400mg மருந்து போதுமாக காணப்பட்டது.
அப்போது எனக்கு 80% C-Pap வழங்கப்பட்டது. C- Pap என்ற உபகரணத்தின் மூலம் எனக்கு ஒக்ஸிஜன் வழங்கப்பட்டது.
C- Pap உடன் இரண்டு மணித்தியாலங்கள் இருக்க முடியாது.
அது அந்தளவு சிரமமானது. ஆனால், நான் அதை தொடர்ச்சியாக 7-8 மணித்தியாலங்கள் அணிந்திருந்தேன். சூப் மற்றும் நீர் அருந்துவதற்காக 7-10 நிமிடங்கள் மாத்திரம் அதனை நான் கழற்றினேன். இதனை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நான் அணிந்திருந்தேன்.
காரணம் அடுத்த தெரிவு என்னை Oxigen ventilator machine இல் வைப்பதாகும் என்பதை நான் அறிந்துவைத்திருந்தேன். அதில் வைத்திருக்கும் 90 வீதமானோரின் உயிரை காப்பாற்றுவது கடினம்.
கடவுளின் அருளால் என் நுரையீரல் ஒக்ஸிஜனை உறிஞ்சத் தொடங்கியது.
ICU வில் இருந்த சந்தர்ப்பத்தில் தாங்கமுடியாத வேதனையடைந்தேன்.
ஊசி குத்துவதற்கு எனது கையில் இடம் இருக்கவில்லை.
தினசரி காலையும் மாலையும் இரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதற்கு மேலதிகமாக விசேட இரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அது artety blood test என அழைக்கப்பட்டது.
இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச்செல்லும் கை நரம்புகளில் இருந்து இதற்கான இரத்தம் பெறப்படும்.
அதனை எடுக்கும்போது மிகவும் வலிக்கும். இதயத்திலிருந்து நேரடியாக எடுக்கப்படும் இரத்தமாகும்.
Actual Oxygen levels on the blood and carbondioxide level மட்டத்தின் உண்மையான ஒக்ஸிஜன் அளவு மற்றும் Metabolic imbalance ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.
இதற்கான இரத்தத்தை வைத்தியர்கள் மட்டுமே எடுப்பர்.
சில மருத்துவர்கள் ஒரே தடவையில் எடுத்துவிடுவார்கள். சிலர் இரண்டு அல்லது மூன்று முறை முயற்சிப்பார்கள். அதற்காக அவர்களை குறைகூற முடியாது. ஏனெனில் அது இலகுவில் தெரியாது. வைத்தியர்களும் சுமார் 3 கையுறைகளை அணிந்திருப்பதால் எளிதில் உணரமாட்டார்கள்.
இவ்வாறு 3-4 தடவைகள் இரத்தம் எடுப்பார்கள்.
அது சொல்லமுடியாத அளவிற்கு வேதனையான விடயம்.
உடம்பில் இரத்தம் உறைவதை தடுப்பதற்காக தினமும் காலையிலும் மாலையிலும் வயிற்றல் ஊசிமருந்து ஏற்றுவார்கள்.
தக்ஷிலா இல்லாவிட்டால் இன்று நான் இந்த இடத்தில் இல்லை. காரணம்இ நான் மூச்சுவிட சிரமப்படும்போது அவர் சத்தமிட்டு வைத்தியர்களை அழைத்தார். தக்ஷிலா என்னுடன் இருக்கக் கிடைத்தது கடவுள் எனக்கு அருளிய ஆசீர்வாதமாகும்.
உடம்பை சிறிதளவேனும் அசைத்தால் சுவாசிக்க முடியாது…
அது இயல்புநிலைக்கு திருப்ப 20 நிமிடங்கள் செல்லும். இது மரணத்தை எதிர்த்து போராடும் போர். ஒரு நாளில் பல தடவைகள் இந்நிலை ஏற்படும்.
நான் குணமடைந்து வீடுவந்த போதும் இன்னும் எனக்கு சரியாக பேசமுடியவில்லை. 10 அடி தூரம் கூட நடக்கமுடியவில்லை.
குணமடைய இன்னும் ஒரு மாதமளவில் செல்லும்.
எனது உயிரை காப்பாற்றிய கடவுள் மற்றும் கடவுளைப் போன்ற வைத்தியர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்….
நீங்கள் கொவிட் நிமோனியாவால் பீடிக்கப்பட்டால் உங்கள் உயிரைக் காப்பாற்ற நீங்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும்..!!
இந்த நோயால் நான் பீடிக்கப்பட்டதால் வாழ்க்கையின் உண்மையான ஃ தவறான அம்சங்களை நான் புரிந்துகொண்டேன்.
நாம் எப்போது இந்த வாழ்க்கையை விட்டுச் செல்வோம் என்று தெரியாது.
ஆகவே தாமதமன்றி புண்ணியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்….
சகல உயிரினங்களையும் அன்புடன் நேசியுங்கள்…
கொவிட் கொடியது …!
( மூலம் Covid-19 Sri Lanka தமிழாக்கம் கலாவர்ஷி கனகரட்ணம் Kalavarshny Kanagaratnam )