கடல்வாழ் உயிரினங்கள் இறந்த கரையொதுங்குவது பற்றிய செய்தி பொய்யானதா? அமைச்சர் டக்ளஸின் கருத்து எழுப்பியுள்ள குழப்பம்

0
222
Article Top Ad

இலங்கையில் கடந்த சில வாரங்களாக ஆமைகள் உட்பட கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவரும் நிலையில் மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தவொரு ஆமைகளோ கடல்வாழ் உயிரினங்களோ உயிரிழக்கவில்லை எனக் கூறியிருப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.

இறந்த ஆமைகள் கரையொதுங்கவில்லை என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூற்றுத்தொடர்பாக இலங்கையின் புகழ்பெற்ற கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சியாளர் கலாநிதி ஆஷா டி வொஸ் தனது டுவிட்டரில் இட்டுள்ள பதிவில் அமைச்சரின் கூற்றில் எவ்வித உண்மையும் இல்லை . கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துவருவது தொடர்பாக தாம் அட்டவணைப்படுத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் நியுஸ் பெஸ்ற் செய்தித்தளம் பிரசுரித்திருந்த செய்தியில் கடந்த மூன்று வாரங்களில் ஆமைகள் உட்பட சுமார் 60 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இன்றையதினமும் மூன்று ஆமைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.