EURO 2020 ஐரோப்பிய கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதிக்கு தகுதி பெற்றது.
16-வது ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது 2-வது சுற்று போட்டிகள் (நொக்-அவுட்) தொடங்கிவிட்டன.
இதில் ஞாயிறு நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்பெயினின் செவில்லி நகரில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்த்துக்கல் அணியும், ‘முதனிலை’ அணியான பெல்ஜியமும் மல்லுகட்டின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-−0 என்ற கணக்கில் போர்த்துக்கல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாகபுடாபெஸ்ட் நகரில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செக் குடியரசு, நெதர்லாந்து அணிகள் மோதின. இதில், செக் குடியரசு அணி 2-−0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி காலிறுதியில் டென்மார்க்கை சந்திக்கிறது.