சுவிர்ஸர்லாந்துக்கு எதிராக உலக சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி

0
191
Article Top Ad

EURO 2020 யூரோ கோப்பையைக் கைப்பற்றும் அணி என்று உலக சம்பியன்களான பிரான்ஸ் அணி பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. . அதற்கேற்றவாறு ரியல் டைம் ஆட்டத்தில் 3 கோல்களை அடித்தது.

ஆனால் சுவிட்சர்லாந்து சவாலை சமாளித்து 3 கோல்களை அடிக்க ஆட்டம் 3-3 என்று சமன் ஆனது. ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது அதிலும் வெற்றி தோல்வி தெரியாமல் போக ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.

இதில் சுவிட்சர்லாந்து 5-4 என்ற கோல்கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றாலே ஆட்டம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம். இதில் பிரான்சின் மின்னல் வீரர் சூப்பர் ஸ்டார் கைலியன் மபாப்பேயின் பெனால்டி ஷாட்டை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சரியாகக் கணித்தார்.

வலது புறம் டைவ் அடித்து தட்டி விட்டார். இது பிரான்ஸின் யூரோ கனவைத் தகர்த்தது. காலிறுதியில் ஸ்பெயின் அணியைச் சந்திக்கிறது சுவிட்சலாந்து.