வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 63ஆக அதிகரிப்பு

0
209
Article Top Ad

அரசாங்க வைத்தியர்களின் அனைத்து தரங்களில் உள்ளவர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 63ஆக அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குறித்த வயதெல்லை 61ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.

அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட தினமான ஏப்ரல் 20, 2021 முதல் இவ்வறிப்பு ஓய்வூதிய பிரமாணத்தில் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையொன்றில் இலங்கையின் சுகாதார அமைச்சின் கீழ் 19900 மருத்துவர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் புதிதாக 1450 மருத்துவர்கள் சுகாதார கட்டமைப்பில் புதிதாக இணைந்துகொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.