Update இன்றியே சாதனை படைக்கும் வலிமையின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது?

0
322
Article Top Ad

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட தல அஜித் குமார் தற்போது வினோத் இயக்கத்தில் திரைவாழ்வில் தனது 60வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத், அஜித் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர்.

அஜித் இந்தப் படத்தில் பொலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படத்தின் பெர்ஸ்ட் லுக் மே 1-ம் திகதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் மக்கள் அல்லல்படும் இந்த நேரத்தில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று படக்குழுவினர் பெர்ஸ்ட் லுக் ரிலீஸ் திகதியை தள்ளி வைத்தனர்.

இதனால் வலிமை படத்தின் அப்டேட் வெளியிடுமாறு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது படம் குறித்த எந்தவொரு அப்டேட்-ம் வெளியாகாத நிலையிலும் வலிமை வேறு வகைகளில் சாதனை படைக்கத் துவங்கியுள்ளது. வெளியாகவிருக்கும் படங்களுக்கு புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் ஆர்வம் தெரிவிக்கலாம்.

அப்படி வலிமை படத்திற்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். பாகுபலி சாதனையை வலிமை முறியடித்துள்ளது. இதையடுத்து இந்திய அளவில் வலிமை இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்தில் 17 லட்சம் எண்ணிக்கையுடன் அவென்ஜர்ஸ் எண்டு கேம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் வலிமை படம் தொடர்பான உத்தியோக அறிவிப்பு வெளியான பின்னர் 20 மாதங்களாகியும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூலை முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பெர்ஸ்ட் லுக் போஸ்டருடன் மோஸன் பட போஸ்டரும் வெளியாகும் என தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.