Article Top Ad

26,000 பைஸர் பையோடெக் தடுப்பூசிகளை உள்ளடக்கிய முதற்தொகுதி இலங்கைக்கு இன்று காலை வந்துசேர்ந்தது.
இதனையடுத்து தெற்காசியாவிலேயே முதன்முறையாக பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட நாடு இலங்கை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டது.

இருந்தபோதிலும் கடந்த மார்ச் மாதத்திலேயே மாலைதீவு பைஸர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து ஜனாதிபதியின் டுவிட்டர் தளத்தில் இருந்து காலை பிரசுரிக்கப்பட்ட பதிவு நீக்கப்பட்டு பின்னர் தெற்காசியாவிலேயே முதன்முறையாக பைஸர் தடுப்பூசியைக் கொள்வனவு செய்த நாடு இலங்கை என பதிவிடப்பட்டது.


