55 வருட கனவை நனவாக்கி இங்கிலாந்து அணி யூரோ இறுதிப் போட்டிக்கு தகுதி

0
182
Article Top Ad

கால்பந்து விளையாட்டின் தாயகமாக கருதப்படுவது இங்கிலாந்து. 1966ம் ஆண்டில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பியன் பட்டம் வென்றதன் பிறகு பெரிய சம்பியன் பட்டங்கள் எதனையும் இதுவரை வென்றதில்லை.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற யூரோ 2020 கால்பந்தாட்ட அரையிறுதிப்போட்டியில் டென்மார்க் அணிக்கெதிராக வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி ஐந்துதசாப்த கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டுமாக இறுதிப் போட்டியொன்றுக்கு முன்னேறியுள்ளது.

போட்டி ஆரம்பமாகி 30வது நிமிடத்தில் தமக்கு கிடைத்த ப்ரி கிக் மூலமாக டென்மார்க்கிற்கான முதலாவது கோலை டாம்ஸ்கார்ட் அடித்தார்.

இதனையடுத்து ஷஹா பரிமாறிய பந்தை ரஹீம் ஸ்டேலிங் டென்மாரக்கின் கோல் எல்லைக்குள் அடிக்க முற்படுகையில் அதனைத்தடுக்க முனைந்த டென்மார்க் தலைவர் கேஜார் தமது கோல்கம்பத்துக்குள்ளேயே அடித்ததையடுத்து கோல் எண்ணிக்கை 1ற்கு 1என்ற கணக்கில் சமநிலையடைந்தது.

இடைவேளையின் போதும் போட்டியின் உத்தியோகபூர்வ நேரம் நிறைவடைந்தபோதும் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருந்தது.

இதனை அடுத்து வழங்கப்பட்ட மேலதீக நேரத்தில் ரஹீம் ஸ்டேர்லிங் டென்மார்க் அணியின் கோல் காப்பளருக்கு அருகே கொண்டுவருகையில் தடுத்தாடுவோர் தவறிழைத்ததன் காரணாக இங்கிலாந்துக்கு பெனால்டி உதை வழங்கப்பட்டது. இதனைப்பயன்படுத்தி இங்கிலாந்து அணித்தலைவர் ஹரி கேன் கோல் அடித்தார்.