நொவாக் ஜொகோவிச் : உலகின் ஈடு இணையில்லா தற்கால டென்னிஸ் சம்பியன்

0
283
Article Top Ad
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இத்தாலிய வீரர் மடாயோ பெரட்டினியைத் தோற்கடித்து தனது 6வது விம்பிள்டன் சம்பியன் பட்டம் வென்ற நொவாக் ஜொகோவிச் கிண்ணத்திற்கு முத்தமிடும் காட்சி. இதுவரை ஜொகோவிச் ஒட்டுமொத்தமாக 20 கிராண்ஸ்லாம்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிலர் என்னதான் சாதித்தாலும் அவர்களுக்கு ரசிகர்கள் உரிய கௌரவத்தை வழங்கத்தவறிவிடுகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக சேர்பிய டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிச்சிற்கு அதிகமாக ரசிகர்களிடம் இருந்து உயரிய கௌரவம் வழங்கப்படவில்லை என்பது உண்மை.

கடந்த 11 ஆண்டு கால டென்னிஸ் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் சுவிர்ஸலாந்தின் ரொஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடால் இருவர் சேர்ந்து பெற்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை விடவும் அதிகமாக பெற்றவர் நொவாக் ஜொகோவிச் என்றால் வியப்பாக உள்ளதா?

2003ம் ஆண்டுமுதல் 2010ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ரொஜர் பெடரர் மொத்தமாக 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றெடுத்திருந்தார். 2005ம் ஆண்டுமுதல் 2010ம் ஆண்டு வரை நடால் 9 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தார். மறுமுனையில் ஜொகோவிச் 2010ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் வெறுமனே ஒரே ஒ ரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையே வென்றெடுத்திருந்தார்.

ஆனால் 2011ம் ஆண்டு முதல் இந்த நிலைமை மாற்றம் பெற்றுவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் அதிகமாக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் நொவாக் ஜொகோவிச் தான். அவர் 19 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை இந்தக்காலப்பகுதியில் வென்றெடுத்துள்ளார். மறுபுறத்தில் பெடரரும் நடாலும் கூட்டாக 15 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களையே வென்றெடுத்துள்ளனர்.

ரொஜர் பெடரர் மொத்தமாக 4 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களையே கடந்தபத்து வருடங்களில் வென்றுள்ளார். நடால் கடந்த பத்துவருடங்களில் 11 சம்பியன் பட்டங்களை வென்றுள்ளர்.

தற்போது பெடரர் மற்றும் நடாலுக்கு சமானமாக ஜொகோவிச்சும் 20 கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றெடுத்துள்ளார்.

டென்னிஸ் விளையாட்டுலகின் தலைசிறந்த நடப்பு வீரர் யார் என்ற கேள்விக்கு ஜொகோவிச்சின் நேற்றைய விம்பிள்டன் வெற்றி மேலும் ஒரு படி மேலே வலுச்சேர்க்கின்றது.

இது தொடர்பாக நேற்றையதினம் குளோப் தமிழில் நடைபெற்ற கலந்துரையாடல்