வைத்தியசாலை பிணவறைகளில் குவியும் பிணங்கள். மக்களே அவதானமாக இருங்கள்

0
343
Article Top Ad
கொழும்பிலுள்ள பொலிஸ் பிணவறையிலிருந்து பிணங்கள் அப்புறப்படுத்தப்படும் காட்சி
கொழும்பிலுள்ள பொலிஸ் பிணவறையிலிருந்து பிணங்கள் அப்புறப்படுத்தப்படும் காட்சி
கொழும்பிலுள்ள பொலிஸ் பிணவறையிலிருந்து பிணங்கள் அப்புறப்படுத்தப்படும் காட்சி
கொழும்பிலுள்ள பொலிஸ் பிணவறையிலிருந்து பிணங்கள் அப்புறப்படுத்தப்படும் காட்சி

இலங்கையில் கொரோனா சிசிச்சையளிக்கப்படும் வைத்தியசாலைகளின் பிணவறைகளில் தற்போது பிணங்கள் குவிந்துகாணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாக சுமார் 100 மரணங்கள் நாளாந்தம் பதிவாகியதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் உண்மை நிலைமை அதனைவிடவும் மிகவும் மோசமாக படமடங்காக இருப்பதான கவலைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

வைத்தியசாலை பிணவறைகளில் குவிந்துகிடக்கும் பிணங்கள்- சிலோன் டுடே பத்திரிகை தலைப்பு

அடுத்த 2 வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்: சவேந்திர சில்வா

அடுத்த இரண்டு வாரங்களில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீடுகளில் இருந்து வௌியேறுமாறும் பொருத்தமான முகக்கவசங்களை அணிந்து செல்லுமாறும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து வகையான முகக்கவசங்களும் இக்காலத்திற்கு பொருந்தாது என வைத்தியர்களும் விசேட நிபுணர்களும் கூறுகின்றனர்.

Covid-19 நோயாளர்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், மிக வேகமாக பரவக்கூடிய பிறழ்வு நாட்டிலுள்ளது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

உலக நாடுகள் Covid-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்திருக்கும் நடவடிக்கைகளை Covid-19 ஒழிப்பு தேசிய செயலணி என்ற வகையில் முன்னெடுத்துள்ளோம்.

எனினும் பொதுமக்கள் சுய ஒழுக்கத்துடனும் பாதுகாப்புடனும் செயற்பட்டால் மாத்திரமே நாட்டின் தற்போதைய நிலையை மாற்ற முடியும்என சவேந்திர சில்வா மேலும் கூறினார்.

இதனிடையே முழுமையாக தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் அதற்கான அட்டையை தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

அனைவரையும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லையென்றால் சிற்சில இடங்களுக்கு செல்வதற்கு உங்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம்.

நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சில இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை பரிசீலிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் உருவாகக்கூடும்.

செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திற்குள் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றோம்

இதேவேளை இலங்கையில் மேலும் 98 பேர் Covid-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக நேற்றையதினம் அறிவித்தல் வெளியாகியது

54 ஆண்களும் 44 பெண்களும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்களில் 30 வயதிற்கு குறைவான ஒருவரும் 30 வயது தொடக்கம் 60 வயதிற்கு இடைப்பட்ட 27 பேரும் அடங்குவதோடு ஏனைய 70 பேரும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவாகியுள்ள Covid-19  மரணங்களின் எண்ணிக்கை 4,919 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக உண்மையான தகவல்களை வெளிக்கொண்டுவரும் வகையில் விசேட சமுதாய மருத்துவ நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதனுடன் நேற்று நடத்திய மெய்நிகர் நேர்காணல்