வெளிநாடுகளில் 150 இலங்கைப்பணியாளர்கள் கொரோனாவால் பலி

0
532
Article Top Ad

இலங்கையில் இருந்து வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வௌிநாடுகளுக்கு சென்ற பணியாளர்களில் கிட்டத்தட்ட 150 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து 17 நாடுகளுக்கு சென்ற பணியாளர்களில் பலர் தொற்றுக்குள்ளான போதிலும் பெரும்பாலானோர் குணமடைந்துள்ளதாக மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் சவூதி அரேபிய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.