மேற்கு ஆப்பிரிக்காவில் புதிய கொடிய வைரஸ்; உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

0
223
Article Top Ad

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் Marburg என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலா கொவிட் – 19 போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது.

வெளவால்களிலிருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி தெற்கு குக்கெடோ மாகாணத்தில் மார்பர்க் வைரஸ் நோய் காரணமாக இறந்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தியதில் இந்த கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக உலக சுகாதார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கினியாவில் எபோலா நோய் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில் புதிய மார்பர்க் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.