இலங்கையில் மேலும் 194 கொவிட் மரணங்கள் பதிவு

0
175
Article Top Ad

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 193 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 7,366 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 194 மரணங்களுடன் இலங்கையில் இதுவரை 7,560 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 194 பேரில் 91 பேர் ஆண்கள் 103 பேர் பெண்கள் என்பதுடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் 145 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.