இலங்கையில் இதுவரை “உத்தியோகபூர்வமாக”10,504 கொவிட் மரணங்கள்

0
307
Article Top Ad

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 184 மரணங்கள் செவ்வாய்க்கிழமையன்று பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 10,320 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 184 மரணங்களுடன் இலங்கையில் இதுவரை 10,504 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 184 பேரில்இ 97 பேர் ஆண்கள் 87 பேர் பெண்கள் என்பதுடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் 134 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.