ஈஸ்டர் தாக்குதல்: பொலிஸார் மீதுபழிசுமத்த வேண்டாம் என ரணில் வலியுறுத்து

0
231
Article Top Ad

 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என்று முன்னாள் பிரதமரும்  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்தபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒரு பகுதி வெளியிடப்படவில்லை. அதனை பாராளுமன்றத்துக்கு வழங்க வேண்டும். அது தொடர்பான முழுமையாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பொலிஸார், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அப்போது நானே பொறுப்பாக இருந்தேன். பிரதிப் பொலிஸ்மா அதிபர், அதிகாரிகள் அனைவரும் செய்ய வேண்டியவற்றை சிறப்பாகச் செய்தனர். அவர்கள் அதனைச் செய்யவில்லை என்று என்னால் கூற முடியாது. சுற்றுநிருபம் வெளியானது எனக் கூறப்படுகின்றது. அது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் வேறு வேலைகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த வார இறுதியிலேயே சிங்களப் புத்தாண்டும் இருந்தது. அதன்பின்னர் வந்த முதலாவது வார இறுதியே சம்பவம் நடந்த நாள்.

சனிக்கிழமை இரவு இசை நிகழ்ச்சிகள் பல இருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை சைக்கிள் போட்டி இருந்தது. நீதி அமைச்சர் இது தொடர்பில் பார்க்க வேண்டும். கொழும்பில் அன்று இருந்த நிகழ்வுகள் தொடர்பில் உங்களுக்குத் தெரியும். கம்பஹாவிலும் நிகழ்வுகள் இருந்தன. இது தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய வேண்டும். அரசு கூறியதாலேயே இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்த நிகழ்வுகளை நாங்கள் கூறிய பின்னர் நிறுத்தினர்.

நான்தான் பொறுப்பில் இருந்தேன். அவர்கள் பொறுப்புகளைக் கைவிட்டிருந்தனர் என்று என்னால் கூற முடியாது. பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் கொழும்பு, கம்பஹாவில் தமது பணிகளை முன்னெடுத்தனர்” – என்றார்.
…….