பூமி வெப்பம் உயருவது ஏன் என எளிமையாக விளக்கிய விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

0
166
Article Top Ad

காலநிலை அன்றேல் பருவநிலை மாற்றம் தொடர்பான சிக்கலான அம்சங்களை இயற்பியல் மாதிரிகளாக உருவாக்கிய விஞ்ஞானி,காபனீர் ஒக்ஸைட் மூலம் பூமியின் வெப்பநிலை எப்படி உயருகிறது என்பது விளக்கிய விஞ்ஞானி உள்ளிட்ட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யுகரோ மனபே, ஜேர்மனியின் க்ளாஸ் ஹேஸல்மன், இத்தாலியின் ஜோர்ஜியோ பாரிசி ஆகிய மூன்று பேரும் விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பூமியின் வளிமண்டலத்தில் காபனீர் ஒக்ஸைட் செறிவு அதிகரிக்கும்போது பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை எப்படி அதிகரிக்கிறது என்பது குறித்து மனேபே ஆய்வு செய்திருக்கிறார். 1960-களில் பூமியின் பருவநிலை குறித்த மாதிரிகளை இவர் உருவாக்கினார். இன்றைய பருவநிலை மாதிரிகளுக்கு இவரது ஆய்வுகளே அடிப்படையாக அமைந்தது.

அதற்கு10 ஆண்டுகளுக்குப் பிறகு பருவநிலைக்கும் காலநிலைக்கும் இடையேயான தொடர்பை விளக்கினார் க்ளாஸ் ஹேஸல்மன். இயற்கையாகவும் மனித நடவடிக்கைகளாலும் பருவநிலையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதையும் இவர் தனது மாதிரிகள் மூலம் தெளிவுபடுத்தினார்.

1980 இல் ஜோர்ஜியோ பாரிசி சீரற்ற சிக்கலான பொருட்களில் மறைந்திருக்கும் வடிவங்களைக் கண்டுபிடித்தார். அவை இயற்பியலில் மட்டுமல்ல, கணிதம் உயிரியல்இ நரம்பியலில் உள்ள சீரற்ற சிக்கலான பொருட்கள் மற்றும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளப் பயன்படுகின்றன