170 நாள்களின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் MP பிணையில் விடுவிப்பு

0
34
Article Top Ad

 

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் 170 நாள்களின் பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் மலையக சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கு ஆகியவற்றில் இருந்து ரிஷாத் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டது.

ரிஷாத் பதியுதீன் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கொழும்பு, பௌத்தலோக மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கோட்டை நீதிவான் பிணை வழங்கினார்.

தலா 50 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் கீழ் பிணை வழங்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதன்போது, ரிஷாத் பதியுதீனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

பிணை வழங்கப்பட்ட பின்னர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here