மீண்டும் சிவப்பு வலயத்துக்குள் இலங்கை நுழையும் அபாயம்! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0
334
Article Top Ad

“நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும்.”

– இவ்வாறு சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் நாயகம் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலயத்துக்கு முன்னேறியுள்ளது.

கொரோனாத் தொற்றுப் பரவலைக் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தும் நாடுகள் பச்சை வலயத்தில் சேர்க்கப்படும்.

எனினும், நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டை பச்சை வலயத்தில் தொடர்ந்தும் பேணுவது மக்களின் கடமையாகும்.

நாட்டில் பதிவாகும் நாளாந்தக் கொரோனா உயிரிழப்பு மற்றும் தொற்று எண்ணிக்கையின் அடிப்படையில் சுகாதார ஸ்தாபனம் உட்பட பல சர்வதேச அமைப்புகள் இலங்கையை மீண்டும் பச்சை வலயத்துக்குள் அனுமதித்துள்ளன” – என்றார்.