மீண்டெளும் சுற்றுலாத்துறை பொருளாதார நெருக்கடியில் இருந்து விமோசனமளிக்குமா?

0
93
Article Top Ad
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்திணறும் இலங்கைக்கு தேவையான அந்நியச் செலாவணியைக் கொண்டுவரும் துறைகளில் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைந்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை பரிதாபகரமான நிலையிலேயே காணப்படுகின்றது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில் பெருந்தொகை சுற்றுலாப் பயணிகளை இலங்கை ஈர்க்கின்றது. இலங்கையின் நல்ல காலநிலை. இயற்கை அழகு, கடற்கரைகள், வரலாற்று இடங்கள் பண்பாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை தெற்கிலும், தென்கிழக்கிலும் பெரிதும் வளர்ந்துள்ளது. காலி கடற்கரை, கண்டி மலைப்பகுதி, அனுராதபுர பொலநறுவை வரலாற்று சிறப்பு மிகு இடங்கள், தேசிய பூங்காக்கள், பெளத்த விகாரகைகள் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.


ஈழப் போர் சுனாமி அகியவை பயணிகள் வருகையை சற்றுக் குறைத்தாலும் ஒப்பீட்டளவில் அதிக பயணிகள் ஆண்டுதோறும் இலங்கைக்கு வருகின்றனர். .

2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுற்றுலாத்துறை 

குறிப்பாக 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் சுற்றுலா துறை மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்திருந்தது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்இ இலங்கையின் சுற்றுலாத்துறையை பாரிய வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிருந்தது.

இவ்வாறான நிலையில், 2019ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி நகர்ந்து, நவம்பர் மாதமளவில் வழமைக்கு திரும்பியிருந்ததாக இலங்கை சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்திருந்தது.

இது தவிர உலகத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த மார்ச் மாதம் இலங்கையையும் தாக்கியது.

இலங்கையில் முதன்முறையாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து 2021 மார்ச் மாதம் 20ஆம் திகதி நாடு முடக்கப்பட்டதுடன் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

அப்போது முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை அடுத்துவந்த பல முடக்க அறிவிப்புக்களால் ஏறத்தாழ 100 சதவீத வீழ்ச்சியை கண்டதென்றால் வியப்பல்ல

unnamed (9).jpg

2018ம் ஆண்டு  இலங்கைக்கு  2,333 ,796 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருந்தனர்  ஈஸ்டர் தாக்குதலால் சுற்றுலாத்துறை ஒரு சில மாதங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் 2019ம் ஆண்டில் 1,913 ,702 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்திருந்தனர்.

ஆனால் 2020ம்ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்தாண்pல் 507 704 சுற்றுலாப்பயணிகளே வருகைதந்திருந்தனர்  அவர்களில் பலரும் 2020 மார்ச் மாதம் வரையில் வருகைதந்தவர்கயேயாவர். 2020 ஏப்ரல் மே ஜுன் ஜுலை ஓகஸ்ட் செப்டெம்பர் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எந்தவொரு சுற்றுலாப்பயணியும் நாட்டிற்கு வருகைதரவில்லை

இந்த நிலையில் 2021ம் ஆண்டில் படிப்படியாக சுற்றுலாத்துறை மீட்சி பெறத்தொடங்கியிருக்கின்றது. கடந்த செப்டெம்பர் மாதத்தில் 13 547 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்த நிலையில் செப்டம்பர் வரை இவ்வாண்டில்37 ,924 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

. கடந்த வாரத்தில் மக்கோன்ன மற்றும் வெலிகம பகுதிகளுக்கு சென்று சுற்றுலாப்பயணிகள் சிலரைச் சந்தித்துப் பேசினோம்.

அப்போது மக்கோனவிலுள்ள ஆயுர்வேத சுற்றுலாத்தளமொன்றில் தங்கியிருந்த ஜேர்மனியைச் சேர்ந்த உவே எர்டெஸ் கருத்துவெளியிடுகையில் ஐரோப்பாவில் குறிப்பாக ஜேர்மனியில் ஆயுர்வேத சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்வதற்கு ஆர்வம் அதிகமாக காண்பிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இங்கு வருகை தரும் இத்தகைய சுற்றுலாப்பயணிகள் குறைந்தது இரண்டுவாரங்களுக்கேனும் முன்பதிவு செய்துவிட்டே வருவதாகக் குறிப்பிட்டார்.  Hiru Vilas ஆயுர்வேத சுற்றுலாத்தல உரிமையாளர் ரூவான் குறிப்பிடுகையில் சுற்றுலாப்பயணியொருவர் இரண்டுவாரகாலம் தங்கியிருக்க 2500 அமெரிக்க டொலர்களை அறவிடுவதாகக்குறிப்பிட்டார் இதனைத்தவிர விமானக் கட்டணம் உள்நாட்டுப் பயணம் கொள்வனவுகளுக்காக மேலும் பல ஆயிரம் டொலர்களை செலவிடுகின்றனர். இவற்றில் கணிசமான தொகை இலங்ககைக்கு கிடைக்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

 நாங்கள் சென்று பார்வையிட்ட சுற்றுலாத்தலம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் நிறைந்து காணப்பட்டது. அங்குவந்திருந்த ஜேர்மனியைச் சேர்நத  27 வயதுடைய மென்பொறியிலாளர் ஒருவர் கருத்துவெளியிடுகையில் ‘ ஐரோப்பாவின் பலபகுதிகளுக்கு சென்றாலும் இலங்கையின் இயற்கை எழிலும் செழிப்பும் தன்னை மிகவும் ஈர்த்ததாகக் குறிப்பிட்டார்.

இதேவேளை வெலிகம பகுதியிலுள்ள Kima Surf Camp  சுற்றுலாத்தளத்தில் தங்கியிருந்தவர்கள் கடலில் நீர்சறுக்கு விளையாட்டில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்தனர்.  அந்த சுற்றுலாத்தளத்திலுள்ள 14 அறைகளும் சுற்றுலாப்பயணிகளால் நிறைந்திருந்தது. ஐரோப்பாவிலுள்ள குளிர்கால காலநிலையை கடந்து இலங்கையின் சிதோஷ்ண காலநிலையில் நீர்ச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்க வந்திருப்பது மகிச்சியளிப்பதாக  கரோலின் என்ற சுற்றுலாப்பயணி கூறினார். இலங்கை மிகவும் பிடித்துவிட்டதால் அடுத்தாண்டு மீண்டும் வரவிருப்புவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தரும் போது கொரோனா காரணமாக  எவ்வாறான தடங்கல்கள் காணப்பட்டன என்று வினவியபோது வருமுன்பாக ஒரு பிசிஆர் சோதனை செய்யவேண்டும் தாம் முழுமையாக தடுப்பூசி பெற்றுவிட்டதால்  எந்தவித பிரச்சனைகளும் இருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

 இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை மீண்டும் கவர்ந்துவருவதில் இங்குள்ள சிறந்த நீர்சறுக்குக்கு உகந்த  கடற்கரைகள் முக்கிய இடத்தைப் பெறுவதாக  சுற்றுலாப்பயணிகள் பலரும் தெரிவித்தனர்.

இலங்கையில் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள நீல் வொசிங்டன் கருத்துவெளியிடுகையில் கடந்த ஒன்றரையாண்டுகளாக சுற்றுலாத்துறையில் இருப்பவர்கள் கடும் சவால்களை எதிர்கொண்டதாகக் கூறினார். தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை நீக்க நேரிட்டமை வாகனங்களை விற்பனை செய்ய நேரிட்டமை ஆகியன இதில் அடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.  ஆனால் இலங்கை கடந்த மாதம் மீளவும் கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து மீளத்திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வரவு அதிகரித்துள்ளதால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் தமக்கு 20 சுற்றுலாப்பயணிகள் வரை கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.

தாம் 32 வருடங்களாக சுற்றுலாத்துறையில் பணியாற்றுவதாகவும் இதில் 28 வருடங்கள் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு தற்போது தாயகம் திரும்பியிருப்பதாக கூறும் நீல்  இலங்கை ஒரு மெஜிக் ஐலண்ட் இங்கு இல்லாத எதுவுமே சுற்றுலாப்பயணிகளுக்கு கிடையாது எனவே சுற்றுலாப்பயணிகள்  மிகவும் விரும்புவதாக கூறினார். கடந்தகாலம் இருண்டாக இருந்தபோதும் எதிர்காலம் தொடர்பாக தமக்கு நம்பிக்கை அதிகமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கு மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வருவது நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமானது. 2019ம் ஆண்டில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்கு 12.6 %ஆகக் காணப்பட்டது.

அந்தியச்செலாவணிக் கையிருப்பு குறைவடைந்துள்ளமையால் இறக்குமதிக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பொருட்களின் விலை உயர்வு சடுதியாக அதிகரித்துள்ளது    தற்போது நாடு அடைந்திருக்கும் மிகமோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவேண்டுமானால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும்

ஆக்கம் அருண் ஆரோக்கியநாதர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here