சிறுவர் இல்லத்தில் 32 பேருக்குக் கொரோனா!

0
214
Article Top Ad

பதுளை, பண்டாரவளையிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் ஐந்து வயதுக்குக் குறைந்த 27 பேர் உள்ளிட்ட 32 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனப் பண்டாரவளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் டீ.எம்.ஆர்.திஸாநாயக்க இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவர் நிலையத்தில் சிறுவர்களைப் பராமரிக்கும் ஊழியர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்களாக 52 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 32 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான 32 பேரும் வைத்தியர்களின் மேற்பார்வையின் கீழ், சிறுவர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.