‘பட்ஜட்’டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது! – எரான் விக்கிரமரத்ன தெரிவிப்பு

0
261
Article Top Ad


இந்த வரவு – செலவுத் திட்டத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

சர்வதேச ஒத்துழைப்பும், அதற்கான வேலைத்திட்டமும், மனித உரிமைகளைப் பலப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த அரசின் கீழ் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சி மட்டுமல்ல வறுமையின் பக்கம் நாடு பயணிக்கின்றது.

அரசு ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனக் கூறினாலும், நாட்டில் சட்டம் என்பது இல்லாமல் போயுள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு ஏழு மூளைகள் இருக்கின்றன எனக் கூறினார்கள். அரசமைப்பையும் மாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

அவ்வாறான நிலையில் இப்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டம் மோசமான, தோல்வி கண்ட வரவு – செலவுத் திட்டமாகும். இந்த வரவு – செலவுத் திட்டத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

சட்டவிரோதமாக பல விடயங்களை இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்” – என்றார்.