லீவிஸ் ஹெமில்டன் கட்டார் கிராண்ட் பிரிக்ஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்

0
41
Article Top Ad

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் கட்டார் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன் முதலிடம் பிடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 23 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் 20ஆவது சுற்றான கட்டார் கிராண்ட் பிரிக்ஸ், ஞாயிற்றுக்கிழமை  லோசைல் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 306.66 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 24 நிமிடங்கள் 28.471 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டது.

அவரை விட 25.743 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் இரண்டாவது இடத்தை பெற்றார். அத்தோடு அவர், இரண்டாம் இடத்திற்கான 19 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டார்.

59.457 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, அல்பைன் அணியின் வீரரான பெர்னாண்டோ அலோன்சோ மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 20 சுற்றுகளின் முடிவில், ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டபேன் ஒன்பது வெற்றிகளுடன் 351.5 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹமில்டன் ஏழு வெற்றிகளுடன் 343.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

மெசிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டெரி போட்டாஸ், ஒரு வெற்றியுடன் 203 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த இருபத்தொன்றாவது சுற்றான சவுதி அரேபியன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும்; டிசம்பர் 5ஆம் திகதி, ஜெட்டா கார்னிச் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here