7வது முறையாக தங்க கால்பந்தை வென்ற மெஸ்ஸி.. ரொனால்டோ பாய்ச்சல்

0
49
Article Top Ad

கால்பந்து உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தங்க கால்பந்து கோப்பையை 7வது முறையாக அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி வென்றார்.

பிரான்சில் உள்ள பிரான்ஸ் கால்பந்து என்ற வார இதழலால் வழங்கப்படுவது தான் தங்க கால்பந்து கோப்பை.

2010 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இந்த விருதை ஃபிஃபாவும் இணைந்து நடத்தியது. பின்னர், இதிலிருந்து ஃபிஃபா விலகியது தனிக்கதை.

விருது

கோபா அமெரிக்கா தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மெஸ்ஸிக்கு நட்ப்பாண்டிற்கான தங்க கால்பந்து கோப்பை வழங்கப்பட்டது. இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மெஸ்ஸி 2021ஆம் ஆண்டு தாம் விளையாடியதிலேயே சிறந்த ஆண்டா என்று கேட்டால், நிச்சயம் சொல்ல தெரியவில்லை.ஆனால் அர்ஜென்டினாவுக்காக கோப்பையை வென்றுள்ள ஆண்டு என்பதால் இது எனக்கு விசேஷமான ஆண்டாகும். என்றார்.

லா லிகா கோப்பையில் ஒரே சீசனில் அதிக கோல்கள் அடித்த பெயர்ன் முனிச் வீரர் ராபர்ட் லிவோண்டஸ்கி இந்த விருதுக்கான பட்டியலில் 2வது இடத்தில் இருந்தார். இருப்பினும் அவருக்கு சிறந்த ஸ்டிரைக்கருக்கான விருது வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த மெஸ்ஸி ரத்து செய்யப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான விருதை ராபர்ட் லிவோண்டஸ்கிக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சை இதனிடையே மெஸ்ஸியை விட அதிக தங்க கால்பந்து கோப்பை விருதுகளை வென்ற பிறகு தான் கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று ரொனால்டோ தன்னிடம் கூறியதாக பிரான்ஸ் கால்பந்து இதழின் தலைமை ஆசிரியர் பெர்ரி பேட்டியளித்தது சர்ச்சையாகி உள்ளது. பெர்ரின் இந்த பேட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரொனால்டோ தனது பெயரை பயன்படுத்தி வீண் விளம்பரத்திற்காக பெர்ரி இப்படி பேசியுள்ளதாக ரொனால்டோ கூறியுள்ளார்.

கண்டனம்

மெஸ்ஸிக்கும் தமக்கும் இடையே எவ்வித போட்டியும் பொறாமையும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ரொனால்டோ தனது அணிக்காகவும் நாட்டுக்காகவும் தான் விளையாடுகிறேன் என்றும் விருதுக்காக விளையாடவில்லை என்றும் குறிப்பிட்டார். தாம் சொல்லாத விஷயத்தை பெர்ரி கூறியுள்ளது வேதனை அளிப்பதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார். குவாரண்டைன் விதிகள் காரணமாக இந்த விருது விழா விழங்கும் நிகழ்ச்சியில் தாம் பங்கேற்கவில்லை என்றும் ரொனால்டோ கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here