மேற்கிந்தியத்தீவுகள் -இலங்கை 2வது டெஸ்ற் கிரிக்கட் போட்டி மழையால் பாதிப்பு

0
35
Article Top Ad

மழையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அவ்வணி சார்பாக கிரேக் பிரத்வைட் 22 ஓட்டங்களுடனும் என்க்ருமா பொன்னர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று மழை காரணமாக தாமதமாக ஆரம்பமாகிய போது இலங்கை அணி தொடர்ந்தும் முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

மதிய இடைவேளையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் மேற்கிந்திய தீவுகள் அணி 135 ஓட்டங்கள் பின்னிலையில் 9 விக்கெட்கள் கைவசம் இருக்க 3 ஆம் நாள் ஆட்டத்தை நாளை தொடரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here