Article Top Ad

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, இந்திய நிதி அமைச்சர் எஸ்.நிர்மலா சீதாராமனை இன்று (01) புதுடில்லியில் சந்தித்தார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்புக்கு, இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு, பஸில் ராஜபக்ச தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் இந்திய நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை நிதி அமைச்சின் செயலாளா் ஆட்டிகல, இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.
பஸில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நாளை (02) சந்திக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
……….

