மைத்திரி தலைமையில் இன்று கூடுகின்றது சு.கவின் மத்திய குழு!

0
33
Article Top Ad
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (02) நடைபெறவுள்ளது.

2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் எவை என்பன உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து வெளியேறலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில், இது பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here