2 வது டெஸ்ற் :இலங்கை 164 ஓட்டங்களால் வெற்றி; 2-0 என தொடரை கைப்பற்றியது

0
30
Article Top Ad

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 164 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலஙகை அணி 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

நவம்பர் 29 ஆரம்பமான இப்போட்டியில் இரு இன்னிங்ஸிலும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரமேஷ் மெண்டிஸ் தொடரின் நாயகனாக தெரிவானார்.

போட்டியின் நாயகனாக தனஞ்சய டி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.

இப்போட்டித் தொடரைத் தொடர்ந்து இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் விடைபெறுகின்றார்.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 345 ஓட்டங்களை பெற்ற வேளையில் நேற்று  (03) முற்பகல் இன்னிங்ஸை இடைநிறுத்தியது.

இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காது சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தனஞ்சய டி சில்வா 155 ஓட்டங்களை பெற்றார்.

அதற்கமைய வெற்றி இலக்காக 297 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

அந்த வகையில் நேற்றைய 5ஆம் நாளில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி இலக்கை அடைய முடியாமல் 132 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரமேஷ் மெண்டிஸ் மற்றும் லசித் எம்புல்தெனிய தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here