2வது ஆஷஸ் டெஸ்ற் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அபார வெற்றி: ஐந்து போட்டிகள் தொடரில் 2-0 என முன்னிலை

0
152
Article Top Ad

இங்கிலாந்து அணிக்கெதிராக அடிலைட்டில் நடைபெற்றுவந்த 2வது டெஸ்ற் கிரிக்கட் போட்டியில் 275 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியை அடுத்து ஐந்துபோட்டிகள் கொண்ட தொடரில் 2ற்கு 0என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது அவுஸ்திரேலிய அணி.

போட்டியில் வெற்றிபெறுவதற்கு இறுதிநாளான இன்று 8 விக்கட்டுக்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்தின் கடைநிலை வீரர்கள் கடும் சவாலைக்கொடுத்திருந்தனர்.

போட்டி நிறைவுசெய்யப்படுவதற்கு ஒருமணிநேரம் இருக்கும் வரையில் அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ற் போட்டி எதிர்வரும் 26ம் திகதி மெல்பேர்ணினில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.