ஒமிக்ரோனானால் இறுதி நேரத்தில் தடைப்பட்ட ஆயிரக்கணக்கான விமானப்பயணங்கள்

0
148
Article Top Ad

கொரோனாவின் அபாயகரத் திரிபான ஒமிக்ரோன் அதிதீவிரமாக பரவிவரும் நிலையில் மேற்கொள்ளப்பட்ட இறுதிநேர தீர்மானங்கள் காரணமாக உலகில் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதனால் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக ஆயத்தமாக இருந்த லட்சக்கணக்கானவர்கள் நிர்க்கதிக்குள்ளாகினர்.

இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் மீண்டும் பொதுவெளியில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளன.

வடக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியா, ஒரே இரவில் முடக்கநிலை உத்தரவை விதித்துள்ளது. மேலும் நெதர்லாந்து கடுமையான முடக்கநிலையில் நிலையில் உள்ளது.

மற்ற வகைகளை விட ஓமிக்ரோன் லேசானது என்று ஆரம்பகால கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும் விஞ்ஞானிகள் தொற்றுகளின் அதிகரிப்பினால் கவலைப்படுகிறார்கள்.

கடந்த சில தினங்களில், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட நோய்த்தொற்றுகள் அதிகரித்தன.

அமெரிக்காவில்இ தினசரி ஒமிக்ரோன் தொற்றுகள் சமீபத்திய டெல்டா அலையின் உச்சத்தைத் தாண்டி உயர்ந்துள்ளன. மேலும் நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.