வலிமைன்றது அடுத்தவன காப்பாத்த தான் அழிக்க இல்ல.. வாணவேடிக்கை நடத்தும் வலிமை டிரைலர் எப்படி இருக்கு?

0
14
Article Top Ad

வானத்தில் பைக்குகளின் வாணவேடிக்கை நடத்தும் வலிமை படத்தின் டிரைலர் நேற்றையதினம் வெளியானது. இந்த ட்ரைலர் வெளியாகி சில மணிநேரத்திலேயே 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யூடியுபில் பெற்றுள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட சாதனைகளை முறியடிக்க வலிமை படத்தின் டிரைலருக்காக சாத்தான் ஆர்மியாகவே ரசிகர்கள் மாறிவிட்டனர் என்பது தெரிகிறது

வலிமை படத்தின் கதை என்ன என்பது தெளிவாகவே டிரைலரில் புரியும்படி உள்ள நிலையில் வலிமை டிரைலர் எப்படி இருக்கு என்பது குறித்து முழு விரிவாக இங்கே பார்ப்போம்.

மதுரை டு சென்னை

மதுரையில் அட்ராசிட்டி பண்ணிக் கொண்டிருக்கும் லோக்கல் ரவுடிகளை அசால்ட் பண்ணி விட்டு அர்ஜுன் (அஜித்) சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிறார். சென்னையில் பைக் ரேஸர்களால் நடக்கும் கொலை நடுங்க வைக்கும் சம்பவங்களை பிடிக்க அர்ஜுன் தலைமையிலான குழு நடத்தும் வேட்டை தான் இந்த வலிமை.

நாய் மோப்பம் புடிச்சுடுச்சு இது சாதாரண பைக் ரேஸ் கேஸ் இல்லை. இதற்கு பின்னால் பெரிய கிரைம் இருக்கு என அர்ஜுன் கணிக்க நாய் மோப்பம் புடிச்சுடுச்சு என வில்லன் ஆட்கள் கார்த்திகேயாவிடம் சொல்ல மிரட்டல் வில்லனாக கார்த்திகேயா மாஸ்டர் மைண்ட் உடன் அர்ஜுனுக்கு சிக்கல் கொடுக்கும் அனைத்து வேலைகளையும் அவரே இறங்கி செய்கிறார்.

சிக்கலில் சிக்கும் அஜித்

வில்லன் கேங்கை போலீஸ் உதவியுடன் விரட்டி பிடிக்கும் அர்ஜுனை ஒரு பிரச்சனையில் அழகாக கோர்த்து விட்டு அத்தனைக்கும் காரணம் அர்ஜுன் தான் என போலீசாரையே நம்ப வைத்து சிறைக்குள்ளும் தள்ளி விடுகிறார் வில்லன் கார்த்திகேயா. துவண்டு விழுந்து எழுந்து கர்ஜித்தால் தானே சிங்கத்திற்கு அழகு என்பது போல தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பவனோட சம நிலை தவறுனா அவனோட கோபம் எப்படி இருக்கும்னு காட்டுறேன் என நடிகர் அஜித் தனியாளாக போலீசாருக்கும் தண்ணி காட்டி விட்டு வில்லன்களை பந்தாடும் படமாகவே வலிமை உருவாகி உள்ளது டிரைலர் மூலம் தெளிவாகி உள்ளது.

வாணவேடிக்கை

பைக்குகளை வைத்து வானத்தில் வாணவேடிக்கை காட்டியிருக்கிறார் இயக்குநர் எச். வினோத். யுவன் சங்கர் ராஜாவின் இசை, நீரவ் ஷாவின் கேமரா, திலீப் சுப்புராயனின் சண்டை காட்சிகள் என ஒவ்வொரு ஃபிரேமிலும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் ஸ்டன்ட் இருப்பது ரசிகர்களை புல்லரிக்க வைக்கிறது.

தியேட்டரில் மட்டும் தான்

இப்படியொரு வெறித்தனமான அஜித்தின் படத்தை தியேட்டரை தவிர வேறு எந்தவொரு பிளாட்ஃபார்மிலும் வெளியிடக் கூடாது என அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் வலிமை டிரைலர் எத்தனை கோடி பார்வைகளை கடந்து சாதனை படைக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Read more at: https://tamil.filmibeat.com/reviews/actor-ajith-kumar-s-mind-blowing-valimai-trailer-review-is-here/articlecontent-pf247838-091052.html

http://

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here