கோன்வேயின் சதத்துடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் நியூஸிலாந்து!

0
115
Article Top Ad

நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ஹென்ரி நிக்கோல்ஸ் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

நியூஸிலாந்தின் பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நியூஸிலாந்து அணி சார்பில், டொம் லதம் 1 ஒட்டத்துடனும் வில் யங் 52 ஓட்டங்களுடனும் டெவோன் கோன்வே 122 ஓட்டங்களுடனும் ரோஸ் டெய்லர் 31 ஓட்டங்களுடனும் டொம் பிளென்டல் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சொரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் மொமினுல் ஹக் மற்றும் எபொட் ஹொசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி, நாளை தொடரவுள்ளது.