கொழும்புடனான நெருடல்களை சீரமைக்கும் நோக்குடன் சீன வெளிவிவகார அமைச்சர்

0
159
Article Top Ad
புத்தாண்டு வாரத்தில் இந்துசமுத்திரகடல்தொடும் ஐந்து நாடுகளுக்குபயணத்தை ஆரம்பிக்கிறார் சீன அமைச்சர் வாங் யீ.
அண்மைய நெருடல்களை சீரமைக்குமென் ற எதிர்பார்ப்புடன் கொழும்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, மாலை த்தீவு மற்றும் இலங்கை உட்படஇந்துசமுத்திர பிராந்தியத்திலுள்ள கடல்தொடும் ஐந்து நாடுகளுக்கு புத்தாண்டில் பயணத்தை ஆரம்பிக்கின்றமை சீனாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு விடயங்கள் வலுவடைவதை கோடிட்டுக் காட்டுகிறது .
வாங் ஐந்து நாடுகளுக்கான தனதுபயணத்தை கிழக்கு ஆபிரிக்காவில் ஆரம்பிப்பாரெனவும் என்றும், எரித்திரியா மற்றும் கென்யாவுக்குச் செல்வதாகவும், அதற்கு முன் கொமொரோஸ் தீவு நாட்டுக்கும் , அதைத் தொடர்ந்து மாலை தீவு மற்றும் இலங்கைக்கும் செல்வார் என்றும் சீன வெளியுறவு அமைச்சு வியாழனன்றுகூறியுள்ளது.
“ஆபிரிக்காவில் மூன்று நாடுகளுக்கான விஜயம், சீன வெளியுறவு அமைச்சர்களின் 32 ஆண்டுகால பாரம்பரியமாக ஒவ்வொரு வருடமும் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆபிரிக்காவைத் தேர்ந்தெடுப்பதாகும் ” என்று செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார் . சீன-மாலை தீவு இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவு, சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு மற்றும் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலானஇ ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70 வது ஆண்டு நிறைவு என்பனவற்றை அடிப்படையாக கொண்டதாக இலங்கை, மாலைதீவு ஆகியவற்றுக்கான விஜயம் அமைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“சீனாவும் இந்த இரு நாடுகளும் பாரம்பரியமாக நட்புறவைக்கொண்ட அண்டை நாடுகளா கும். நெருக்கமான உயர்மட்ட பரிமாற்றம்,இறுக்கமான நடைமுறை ஒத்துழைப்பு, பரந்துபட்ட பொது நலன்கள் மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் ஒரே தன்மையான நிலைப்பாடுகளுடன் முக்கியமான பங்காளிகளாக உள்ளன ,” என்றும் அவர் கூறியுள்ளார் .
“பாரம்பரிய நட்பை வலு ப்படுத்தவும், அரசியல்ரீதியான பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், கோவிட்-19 க்கு எதிரான ஒற்றுமையை வலுப்படுத்தவும், ஒரேமண்டலம் ஒரேபாதை முன்முயற்சி கட்டமைப்பின் கீழ் நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கவும். தூதரக உறவுகளின் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் மூலம்தோற்றுவிக்கப்படும்,உத் வேகத்துடன் இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவோம்.” எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார் ,
கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ வட்டாரங்கள் இந்த விஜயம் தற்போதைய திட்டங்கள் மற்றும் முதலீடுகள் மீது கவனம் செலுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன . அதே நேரத்தில் கொழும்பும் பெய்ஜிங்கும் சில வேறுபாடுகளை களைவதற்கு முயற்சி செய்கின்றன. இது கடல்சார் துறையில் சாத்தியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட இலங்கைத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் “இது மரியாதை நிமித்தமான விஜயம்” என்று தி இந்துவிடம் கூறியுள்ளார்.
தொற்றுநோய்க் காலத்தில், சீனா இலங்கைக்கு நாணய பரிமாற்றம் 1.5 பில்லியன்டொலர் , மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையில்போடப் படும் தடுப்பூசிகளில் 80% க்கும் அதிகமானவையென , மொத்தம் 1 பில்லியன் டொ லர்களை அவசரகால கடன்கள் மூலம் உதவியாக வழங்கியுள்ளது,
தொற்றுநோய் தாக்கியதில் இருந்து பெய்ஜிங் கொழும்புடன் வழக்கமான, உயர் மட்ட தொடர்பாடலை பேணி வருகிறது. 2020 அக்டோபரில், அரசியல்குழு உறுப்பினரும் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரியுமான யாங் ஜீச்சி தலைமையிலான “உயர் அதிகாரம் கொண்ட” சீனக் குழு ஒன்று கொழும்பில் இருந்தது, சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கே இந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
வாங்கின் இலங்கை விஜயம் குறிப்பிடத்தக்களவு முக்கியத்துவத்தை பெறுகிறது, மிகவும் வலுவான உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பங்காளிகளுக்கு இடையே அரிதான பதற்றங்களுக்கு பிறகு வருகிறது, இது மூன்று சமீபத்திய வேறுபாடுகளின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
2021பெ ப்ரவரியில் சர்வதேச முயற்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு கடற்கரையிலிருந்துகுறைந்தளவு தூரத்தில் உள்ள யாழ்குடாநாட்டின் மூன்று தீவுகளில் சீன எரிசக்தி திட்டத்திற்கு இலங்கை அனுமதியளித்திருந்தது ஆ யினும், இந்தியா கவலை தெரிவித்ததையடுத்து, அதற்கு மாற்றீடாக மானியம் வழங்க முன்வந்ததையடுத்து, கொழும்பு அதனை இடைநிறுத்தியது. மேலும், கொழும்பை தளமாகக் கொண்ட சீனத் தூதுவரின் அண்மைய யாழ்ப்பாண விஜயம் தமிழ்த் தலைமத்துவத் தின் விமர்சனத்திற்கு உள்ளானது.
மே மாதம், 1.4 பில்லியன் டொ லர் மதிப்பிலான சீனாவின் ஆதரவுடனான கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைநிர்வகிக்கும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது, இந்தத் திட்டத்தை தீவு நாட்டிற்குள் ஒரு “சீனப் பகுதி” என்று அரசாங்கதின் விமர்சகர்கள் வர்ணித்திருந்ததுடன் கணிசமான எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டசேதன உரங்களை “மாசுபாடு” காரணமாக இலங்கை நிராகரித்ததை உள்ளடக்கிய சமீபத்திய சர்ச்சைஏற்பட்டதாகதெரிவிக்கப்பட்டது .
இதற்குப் பதிலளித்த சீனத் தரப்பு, இலங்கை அரசுக்குச் சொந்தமான மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது, அதே வேளையில் சீன நிறுவனம் 8 மில்லியன் டொ லர் இழப்பீடு கோரி இலங்கைக்கு எதிராக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இது இராஜதந்திர உறவுகளை பாதிக்காத “வர்த்தக தகராறு” என்று கொழும்புபேணி வருகிறது. இருப்பினும், அமைச்சரின் பயணத்தின் போது இது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், வாங்கின் மாலை தீவு விஜயம், “இந்தியா வெளியே ” என்ற அரசியல் எதிர்ப்பின் தீவிர பிரச்சாரத்துடன்இசைந்து போகிறது, ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் அரசாங்கம் தீவுதேசத்தில் “இந்திய இராணுவ பிரசன்னத்தை அனுமதித்ததாக ” எதிரணி யால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டைஆளும் நிர்வாகம் மறுத்துள்ளது.