முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று வரலாறு படைத்தது பங்களாதேஷ்

0
116
Article Top Ad

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இடம்பெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிஸிற்காக 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை அடுத்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி 176.2 ஓவர்களில் 458 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கடந்த 12 ஆண்டுகளில் நியூசிலாந்து மண்ணில் அதிக ஓவர்களை எதிர்கொண்ட வெளிநாட்டு அணி பங்களாதேஷ் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்ந்து 130 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதையடுத்து 40 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.