ஆசியாவின் ராணியை nரூ. 2,000 கோடிக்கு ஏலத்தில் விற்க அரசு மறுப்பு

0
220
Article Top Ad

ஆசியாவின் ராணி எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 2,000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினக்கல்லான ‘ஆசியாவின் ராணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 2,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று முன்வந்துள்ளது.

இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத்திலுள்ள சுரங்கமொன்றிலிருந்து 310 கிலோகிராம் எடையுடைய ‘கொரண்டம்’ வகை மாணிக்கக்கல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நீல நிற இரத்தினக்கல்லை உலக சந்தையில் பலதரப்பட்ட நாடுகள் கொள்வனவு செய்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கருத்துத் தெரிவிக்கையில், அந்த விலையில் இரத்தினக்கல்லை வழங்க இலங்கை தயாராக இல்லை.

டுபாய் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த விலையை அறிவித்திருந்தது. அதனை விடவும் அதிக விலை எதிர்பார்ப்பில் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.