தனது உலக சாதனையை தானே முறியடித்த ராபேல் நடால்

0
185
Article Top Ad

 

கடந்த 19 வருடங்களாக ஆண்டில் ஆகக்குறைந்தது ஒரு சுற்றுப்போட்டிகளிலேனும் சம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற அபூர்வமான உலக சாதனை ஸ்பெயின் வீரர் ராபேல் நடால் புரிந்துள்ளார்.

2004ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடம் ஆகக்குறைந்தது ஒரு ஏடிபி சம்பியன் பட்டத்தையேனும் வென்றதன் மூலம் 19 வருடங்களாக தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்துள்ளார்.

35வயதுடைய நடால் இன்று நடைபெற்ற மெல்பேர்ன் ஏடிபி சுற்றுப்போட்டியின் இறுதியாட்டத்தில் அமெரிக்க வீரர் மெக்ஸீம் கிரீஸியை 7ற்கு 6 ற்கு 3 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார்.

2021ம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓகஸ்ட் மாதத்திற்குப்பின்னர் பல போட்டிகளில் பங்கேற்றிராத நடால் 2022 ஜனவரியிலேயே மீண்டும் தொழில்சார் டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பினார்.

இது தனது டென்னிஸ் வாழ்வில் நடால் வென்றெடுத்த 89வது ஏடிபி சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் ஜனவரி 17ம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளிற்கான சிறப்பான ஆரம்பமாக இந்த சம்பியன் பட்டம் நடாலுக்கு அமைந்துள்ளது.

காயம் காரணமாக சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் இம்முறை விளையாடாத நிலையிலும் கொவிட் தடுப்பூசி செலுத்தாத நிலையில் அவுஸ்திரேலிய வருகைதந்த முன்னணி வீரரான சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக்கின் பங்கேற்பு குறித்து தெளிவற்ற நிலை உள்ளதாலும் நடாலுக்கான வெற்றிவாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன.