ஈஸ்டர் படுகொலையின் 1000நாள் பூர்த்தியாகும் நிலையில் பொரளை தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு

0
219
Article Top Ad

பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து நேற்று கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குண்டை செயலிழக்கச் செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை ஈஸ்டர் தாக்குதல்கள் இடம்பெற்று 1000 நாட்கள் எதிர்வரும் ஜனவரி 14ம்திகதி பூர்த்தியாகவுள்ளது.

ராகமவிலுள்ள பஸிலிக்கா தேவாலயத்தில் நினைவுகூரல் வழிபாடுகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை ஏற்பாடுகளைச் செய்துவருகின்றது.

இந்த நிலையில் பொரளையிலுள்ள சகல புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.