பீஜிங்-2022 குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்காது

0
144
Article Top Ad

விரோத சக்திகளின் செயற்பாடு மற்றும் கொவிட்–19 பெருந்தொற்றுக் காரணமாக 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்காது என்று செய்தி வெளியாகியுள்ளது.

விரோத சக்திகளின் செயற்பாடுகள் மற்றும் உலகளாவிய பெருந்தொற்று காரணமாக ஒலிம்பிக்கில் எம்மால் பங்கேற்க முடியாதபோதும், சீன தோழர்கள் அற்புதமான மற்றும் சிறப்பான ஒலிம்பிக் போட்டி ஒன்றை நடத்த நாம் முழு ஆதரவை வழங்குவோம்’ என்று வட கொரிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த ஒலிம்பிக் போட்டியை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் லிதுவேனியா நாடுகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.