நான்காவது தடுப்பூசி தொடர்பில் அரசு அவதானம்!

0
172
Article Top Ad

கொரோனாவுக்கு எதிரான நான்காவது தடுப்பூசி டோஸ் தேவைப்பட்டால் அதனை வழங்குவற்கு அரசு கவனம் செலுத்தியுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று  ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கொரோனாத் டுப்பூசியின் நான்காவது டோஸ் தேவைப்பட்டால், அது இந்த நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட டோஸ்களுக்காக சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.