ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அட்டவணை வெளியானது

0
306
Article Top Ad

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முதல் சுற்றுப் போட்டி ஒக்டோபர் 16 ஆம் திகதி ஜீலாங்கில் உள்ள கர்தினா பார்க்கில் ஆரம்பமாகின்றது. இதில் நமீபியா இலங்கை அணியை எதிர்கொள்கின்றது.

அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 16 முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை ரி20 உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ளன.

அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் சிட்னி பிரிஸ்பேன் அடிலெய்ட் ஜிலாங் ஹோபர்ட் பேர்த் ஆகிய 7 நகரங்களில் உலகக் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த 7 நகரங்களிலும் மொத்தம் 45 போட்டிகள் இடம்பெறவுள்ளன. 16 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ண போட்டியில் ஏற்கனவே 12 அணிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 4 அணிகளின் பங்கேற்பு விரைவில் உறுதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுப்பர் – 12 பிரிவில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

குழு ஏ பிரிவில் இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படும். அதேபோன்று இரு முறை வெற்றிக்கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியும் தகுதிச்சுற்று மூலம் சுப்பர்-12 சுற்றுக்கு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குழு பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி ஸ்கொட்லாந்து மற்றும் இரு தகுதிச்சுற்று அணிகளுடன் மோதுகின்றது.