ஸிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை வெற்றி

0
138
Article Top Ad

ஸிம்பாப்வே அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 184 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில், இலங்கை கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.

பல்லேகல மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க 55 ஓட்டங்களையும் சரித் அசலங்க 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஸிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், ங்கறவ 2 விக்கெட்டுகளையும் சடாரா, முஸரபானி, மஸகட்சா மற்றும் ரியான் பர்ல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.